சில நாட்களுக்கு முன்பு சர்வதேச ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக மாறிய பலூன் விவகாரம் சற்று ஓய்ந்த நிலையில் மீண்டும் ஆரம்பித்துள்ளது. அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளைத் தொடர்ந்து ஜனவரி 2022 ஆம் ஆண்டு அன்று அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவிலும் மர்ம பலூன் பறந்ததாக அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் தகவல் வெளியிட்ட நிலையில் ஒருபுறம் அதை வானொலி தரவுகளை சேமிக்கும் பலூன் என்றும் மறுபுறம் அதில் ஆண்டனாக்கள் பொருத்தப்பட்டு இருந்தது எனவும் சர்வதேச செய்தி நிறுவனங்கள் குறிப்பிட்டு இருக்கிறது.
மேலும் சீனாவின் உளவு பலூன் என குறிப்பிடப்பட்ட பலூனை போலவே இது இருந்தது. சீனாவின் இந்த செயலை கண்டித்து அமெரிக்கா கண்டனம் தெரிவித்த நிலையில் இச்செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவில் பறந்ததாக கூறப்படும் உளவு பலூன் பற்றி அந்நாட்டு பிரதான ஊடகங்களால் கவனிக்கப்படவில்லை என்றும் சில உள்ளூர் ஊடகங்கள் மட்டுமே இச்செய்தியை வெளியிட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் அந்தமான் தீவில் இந்தியா தனது ராணுவ பயிற்சியை நடத்தியதும் குறிப்பிடத்தக்கது.