துருக்கி மற்றும் சிரியாவில் பிப்ரவரி 6 ஆம் தேதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தினால் நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் சீட்டுக்கட்டு போல் நொடிப்பொழுதல் சரிந்து விழுந்துள்ளது. இதனால் 45 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் அந்நாட்டின் மாலத்யா மாகாணத்தில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவாகியுள்ளது என துருக்கி பேரிடர் மேலாண்மை முகமை தகவல் தெரிவித்துள்ளது. ஏற்கனவே ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் விரிசல் விட்டிருந்த கட்டிடங்கள் அனைத்தும் தற்போதைய நிலநடுக்கத்தால் முற்றிலும் நொறுங்கி விழுந்தது. இதனால் அங்குள்ள மக்கள் பீதியில் உள்ளனர்.