மின்னலே திரைப்படத்தின் வாயிலாக சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் கவுதம் மேனன். இதையடுத்து காக்கா காக்க, வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம், விண்ணைத் தாண்டி வருவாயா, என்னை அறிந்தால், அச்சம் என்பது மடமையடா ஆகிய படங்களை இயக்கி ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். அதன்பின் சிம்பு நடிப்பில் இவர் இயக்கிய “வெந்து தணிந்தது காடு” படம் கடந்த வருடம் ரிலீஸ் ஆகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

கவுதம் மேனன் இயக்குனராக மட்டுமன்றி நடிகராகவும் வலம் வருகிறார். இப்போது இவர் லோகேஷ் கனகராஜ் டைரக்டில் விஜய் நடிப்பில் உருவாகும் “லியோ” படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் கவுதம் மேனன் சமூக லைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது. அதாவது, “முத்தப் பிச்சை” என பதிவிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் அடுத்த படத்தின் தலைப்பா? (அ) லியோ? அப்டேட்டா என கமெண்ட் செய்து வருகின்றனர்.