90களில் ஆரம்பத்தில் நடிகர்களுக்கு அதிக சம்பளம் கொடுப்பதால் சில நேரங்களில் தயாரிப்பாளர்கள் நஷ்டம் அடைவதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதனால் விநியோகஸ்தர்கள் தென்னிந்திய நடிகர் சங்கம் இணைந்து ஒரு ஆலோசனை கூட்டம் நடத்தினார்களாம். அதில் நடிகர்கள் அவர்களுடைய சம்பளத்தை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்ததில்   ரஜினிக்கு உடன்பாடு இல்லையாம். அதனால் நடிகர்கள் உடைய மார்க்கெட் வேல்யூ வைத்து தான் சம்பளம் கொடுக்கப்படுகிறது எனவே சம்பளத்தை குறைக்க வேண்டாம் என்று சொன்னாராம் ரஜினி.

இதனால் கடுப்பான விநியோகஸ்தர்கள் இனிமேல் ரஜினி படத்தை வாங்க கூடாது என்று முடிவெடுத்து ரெட் கார்டு கொடுத்தாராம். அப்போதுதான் உழைப்பாளி படத்தில் நடித்து வந்துள்ளார் ரஜினி.  அதன்பின் உழைப்பாளி படத்தை ரஜினியே நேரடியாக திரையரங்கில் ரிலீஸ் செய்துள்ளார். அப்படி வெளியான உழைப்பாளி திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று 150 நாட்களுக்கு மேல் ஓடி வசூல் சாதனை படைத்ததாம். இதனால் பயந்து போன விநியோகஸ்தர்கள் ரஜினிக்கு ரெட் கார்டு கொடுத்ததை விலக்கிக் கொள்வதாக முடிவு எடுத்தார்களாம். இப்படி தனி ஆளாக நின்று பல சம்பவங்கள் செய்ததால் ரஜினி இன்றும் சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார் என்று சினிமா விமர்சகர்கள் கூறுகிறார்கள்