லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய், திரிஷா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘லியோ’ திரைப்படம் வரும் அக்டோபர் 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும், லியோ படத்தில் அர்ஜுன், சஞ்ஜய் தத், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ், “LEO படத்தின் முதல் 10 நிமிடங்களை தவற விட்டுவிடாதீர்கள்.. எப்படியாவது படம் போடுவதற்கு முன்பு தியேட்டர் சென்றுவிடுங்கள். பார்வையாளர்களுக்கு TREATஆக அமையும். அந்த 10 நிமிடத்திற்காக ஓராண்டாக 1000க்கும் மேற்பட்டோர் உழைத்துள்ளோம்; GO SIT CALM AND ENJOY என ரசிகர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.