திருவாரூர் மாவட்டத்திற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் இன்று சென்னையில் இருந்து திருச்சிக்கு விமான மூலம் புறப்பட உள்ளார். இதனைத் தொடர்ந்து நாளை மன்னார்குடியில் நடைபெறும் திமுக பிரமுகரின் இல்ல திருமண விழாவில் அவர் பங்கேற்கிறார். அதனைத் தொடர்ந்து திருவாரூர் மாவட்டம் காட்டூரில் கட்டப்பட்ட வரும் கலைஞர் அருங்காட்சியகம் மற்றும் மணிமண்டபம் அமைக்கும் பணிகள் நடைபெறுவதை ஆய்வு செய்ய வருகை புரிய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இன்று மற்றும் நாளை திருவாரூர் மாவட்டத்தில் ட்ரோன் பறக்க தடை என காவல்துறை உத்தரவிட்டுள்ளது.இந்த தடை உத்தரவை மீறி செயல்படுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.