“முதலமைச்சர் நாற்காலியில் உட்கார்ந்தாச்சு, இன்னும் ஏன் தேர்தல் பிரச்சார மோடுலேயே இருக்கீங்க?” என்று திமுக முன்னாள் எம்.एल.ஏ டாக்டர் எழிலன் செய்தியாளர்கள் சந்திப்பில் முதலமைச்சர் விஜய்யை நோக்கிக் காரசாரமாகக் கேள்வி எழுப்பியுள்ளார். பேரறிஞர் அண்ணாவின் புகழ்பெற்ற பொன்மொழியைச் சுட்டிக்காட்டிய எழிலன், எதிர்க்கட்சியாக இருக்கும்போது கிண்ணத்தை எப்படி வேண்டுமானாலும் சுத்தலாம் என்றும், ஆனால் ஆளுங்கட்சியாக இருக்கும்போது நெய் கரண்டியைப் போல பக்குவமாகத்தான் கையாள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். மக்கள் தமிழ்நாட்டின் முதலமைச்சராகத் தேர்ந்தெடுத்து அனைத்து அதிகாரங்களையும் கொடுத்த பிறகும், விஜய் இன்னும் ஒரு கட்சித் தலைவரைப் போலவே பேசுவதாகக் குற்றம் சாட்டினார்.

​மேலும், திருச்சி பொதுக்கூட்டத்தில் விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பேசினாரா அல்லது தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராகப் பேசினாரா என்ற பெரிய குழப்பம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளதாக எழிலன் குறிப்பிட்டார். அதிகாரத்தில் அமர்ந்து கொண்டு, இன்னும் பழைய தேர்தல் பிரச்சார யுக்தியையும், அதே நேரேட்டிவையும் மட்டுமே பேசுவதை விடுத்து, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான எந்தவொரு தொலைநோக்குத் திட்டத்தையும் (Vision Statement) அவர் மக்கள் முன்வைக்கவில்லை என்றும் எழிலன் ஓப்பனாக விமர்சித்துள்ளார்.