சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், நதியைக் கடக்க முயன்ற ஒரு வைல்ட்பீஸ்ட் கூட்டத்தை முதலைகள் கொடூரமாகத் தாக்குகின்றன. ஒரு கட்டத்தில், ஒரு முதலை வைல்ட்பீஸ்ட்டின் காலைக் கவ்வி தண்ணீருக்குள் இழுக்க முயல்கிறது. மரணத்தின் விளிம்பில் அந்த விலங்கு போராடிக்கொண்டிருந்த போது, அங்கிருந்த ஒரு நீர்யானை திடீரென குறுக்கிட்டு முதலைகளை விரட்டியடிக்கிறது.
மேலும் பொதுவாக நீர்யானைகள் தங்கள் எல்லைக்குள் மற்ற விலங்குகள் வருவதை விரும்பாது என்றாலும், இந்தச் சூழலில் அதன் ஆக்ரோஷமான செயல் அந்த வைல்ட்பீஸ்ட் உயிர் பிழைக்க ஒரு நல்வாய்ப்பாக அமைந்தது. முதலைகளின் பிடியில் இருந்து விடுபட்ட அந்த வைல்ட்பீஸ்ட், நீர்யானையின் உதவியால் பத்திரமாக கரையேறியது. இயற்கையின் வினோதமான மற்றும் வியக்கத்தக்க நிகழ்வுகளில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது.
A herd of hippos suddenly steps in to save a wildebeest from the jaws of a ferocious crocodile! 🦛🔥 pic.twitter.com/UuUOwiT6BW
— Beauty of music and nature 🌺🌺 (@Axaxia88) February 3, 2026
“>
இந்நிலையில் தற்போது இணையத்தில் லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்று வைரலாகி வருகிறது. வேட்டையாடும் விலங்குகளுக்கு இடையே ஒரு பலவீனமான உயிரினம் தப்பிப்பது என்பது காடுகளில் மிகவும் அரிதான ஒன்று என நெட்டிசன்கள் தங்களது கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
