ஹைதராபாத்தைச் சேர்ந்த ஐடி பெண் ஊழியர் ஒருவர், திருமணத்திற்காக மணமகன் தேடும் போது விதித்துள்ள நிபந்தனைகள் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. அந்தப் பெண் தனக்கு வரப்போகும் கணவர் ஹைதராபாத்திலேயே வசிக்க வேண்டும் என்றும், ஆண்டுக்குக் குறைந்தது ₹30 லட்சம் முதல் ₹40 லட்சம் வரை சம்பளம் ஈட்ட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கணவர் ஐடி துறையிலேயே இருக்க வேண்டும் என்ற விருப்பத்தையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார். நவீன காலத்தில் வாழ்க்கைத்தரம் மற்றும் பொருளாதாரத் தேவைகளைக் கருத்தில் கொண்டு பெண்கள் தங்களுக்குப் பொருத்தமான துணையைத் தேடுவது இயல்பான ஒன்றுதான்.
இருப்பினும், இதுபோன்ற மிக உயர்ந்த எதிர்பார்ப்புகள் மற்றும் குறிப்பிட்ட நகரத்திலேயே வசிக்க வேண்டும் போன்ற விடாப்பிடியான நிபந்தனைகள், திருமண உறவின் அடிப்படை நோக்கத்தையே கேள்விக்குறியாக்குவதாகப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். தகுதிக்கேற்ற துணையைத் தேடுவது அவசியம்தான், ஆனால் அது வெறும் “சம்பளப் பட்டியலாக” மாறிவிடக் கூடாது என்பதே சமூக ஆர்வலர்களின் ஆதங்கமாக உள்ளது.
