பாலிவுட் நடிகையும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முன்னாள் இணை உரிமையாளர்களில் ஒருவருமான ஷில்பா ஷெட்டி, தனது கணவர் ராஜ் குந்த்ராவுடன் இணைந்து ₹60 கோடி ரூபாய் மோசடி செய்ததாக தீபக் கோதாரி என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். தொழிலை விரிவுபடுத்த பணம் திரட்டிய பின்னர், அந்த தொகையை தனிப்பட்ட செலவுகளுக்காக பயன்படுத்தியதாக அவர் குற்றம்சாட்டியிருந்தார்.

இது தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ஷில்பா ஷெட்டிக்கு எதிராக லுக்–அவுட் நோட்டீஸ் பிறப்பித்தது. இதனால், அவர் வெளிநாடு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில், வருகிற 25ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை யூடியூப் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கொழும்பு செல்ல அனுமதி வழங்குமாறு ஷில்பா ஷெட்டி மும்பை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு விசாரணை நடைபெற்றபோது, லுக்–அவுட் நோட்டீஸ் அமலில் உள்ள நிலையில் பயண அனுமதி வழங்க முடியாது என நீதிமன்றம் தெரிவித்தது. மேலும், “முதலில் ₹60 கோடி ரூபாயை செலுத்துங்கள்; அதன் பின்னர் வெளிநாட்டு பயணத்திற்கான விண்ணப்பத்தை பரிசீலிக்கலாம்” எனக் கூறி, கடுமையாக எச்சரித்தது. அத்துடன், வழக்கை வருகிற 14ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.