சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், போதையில் இருந்த இளம்பெண் ஒருவரைப் பொறுப்புடன் வீடு சேர்த்த கார் ஓட்டுநரின் செயல் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
வாடகைக் காரில் ஏறிய அந்த இளம்பெண், தான் அதிக போதையில் இருப்பதை உணர்ந்து, தன்னை பத்திரமாக வீடு சேர்க்குமாறு ஓட்டுநரிடம் கோரிக்கை விடுக்கிறார். பயணத்தின் போது அந்த பெண் தனது தாயிடம் பேசுகையில், ஓட்டுநர் குறுக்கிட்டு அவர்களின் தற்போதைய இருப்பிடத்தை தாயிடம் உறுதிப்படுத்தியதுடன், மகளைப் பத்திரமாக ஒப்படைப்பதாக வாக்குறுதி அளிக்கிறார்.
போதையில் உளறும் அந்தப் பெண்ணிடம் கண்டிப்புடன் நடந்துகொண்ட ஓட்டுநர், இறுதியில் அந்த இளம்பெண்ணை அவரது வீட்டின் கதவு வரை அழைத்துச் சென்று பத்திரமாக ஒப்படைக்கும் காட்சிகள் நெட்டிசன்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும், இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து புதிய சர்ச்சை ஒன்றும் எழுந்துள்ளது. இந்த வீடியோவை முதலில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்த அந்த ஓட்டுநர், தற்போது ஒரு புதிய விளக்கத்தை அளித்துள்ளார். வீடியோவை வெளியிடும்போது அந்தப் பெண் அதற்குச் சம்மதம் தெரிவித்திருந்தாலும், தற்போது அது இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவி வருவதால், அந்தப் பெண் தர்மசங்கடத்திற்கு உள்ளாகி வீடியோவை நீக்குமாறு தன்னிடம் கேட்டுக் கொண்டதாக ஓட்டுநர் தெரிவித்துள்ளார்.
<a href=”http://
In a world flooded with negative stories about men (many for valid reasons), let’s also acknowledge the good.
A taxi driver ensured a drunk girl got home safely, informed her parents, masked her identity, and protected her throughout.
Such men exist, many of ‘em 🙌 pic.twitter.com/ehcMFzeUk0
— Vineeth K (@DealsDhamaka) December 26, 2025
“>
ஓட்டுநரின் நேர்மையைப் பலரும் பாராட்டினாலும், தனிநபர் ரகசியம் மற்றும் பாதுகாப்பு சார்ந்த காரணங்களால் இத்தகைய வீடியோக்களைப் பகிர்வது குறித்த விவாதங்களும் இணையத்தில் எழுந்துள்ளன.
