வேலாயுதம், கேடி பில்லா கில்லாடி ரங்கா, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜில்லா, அஞ்சான், அண்ணாத்தே ஆகிய பல்வேறு திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் தான் சூரி. இவர் அண்மையில் வெற்றிமாறன் இயக்கத்தில் நாயாகனாக நடித்த விடுதலை படம் நல்ல வரவேற்பை பெற்று பாராட்டும் கிடைத்தது.

இந்த நிலையில் சூரி அண்மையில் அஜித்தை சந்தித்து பேசியதாகவும், அப்போது சூரியிடம் அஜித் ஒருசில விஷயங்களை பகிர்ந்துகொண்டதாகவும் இணையத்தில் பேசப்படுகிறது. இதில் அஜித் கூறியிருப்பதாவது, “மற்றவர்கள் உங்களை பற்றி என்ன கூறுகிறார்கள் என்பதை பற்றி கவலைக்கொள்ளாதீர்கள். உங்களை பற்றி வரக்கூடிய விமர்சனங்களை தலையில் ஏற்றிக்கொள்ளாதீர்கள். முதலில் உங்களை நீங்கள் மதிக்க துவங்குங்கள். பின் மற்றவர்கள் தானாக உங்களை மதிப்பார்கள். தன்னம்பிக்கை உடன் இருங்கள் சூரி” என அஜித் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.