பிரான்சில் உலக புகழ்பெற்ற கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவானது துவங்கி உள்ளது. வரும் 27ம் தேதி வரை இந்த விழா நடைபெறவுள்ளது. இதில் உலகில் பல மொழிகளில் வெளியாகிய சிறந்த திரைப்படங்கள் திரையிடப்படுகிறது. இவ்விழாவில் பங்கேற்க மத்திய மந்திரி எல்.முருகன் தலைமையில் படக்குழுவினர் சென்று உள்ளனர்.

அதேபோல் நடிகை குஷ்புவும் இந்திய பிரதிநிதியாக பங்கேற்கிறார். இதுபற்றி  குஷ்பு வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் “கேன்ஸ் பட விழாவில் கலந்துகொள்ள பிரான்ஸ் வந்திருக்கிறேன். மதிப்பு மிகுந்த கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்திய பிரதிநிதியாக பங்கேற்க எனக்கு வாய்ப்பளித்த மத்திய மந்திரி அனுராக் தாகூர், இந்திய வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சகத்துக்கு நன்றி” என கூறியுள்ளார்.