தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இளம் விளையாட்டு வீரர்களுடன் ‘Vibe With MKS’ என்ற நிகழ்ச்சியில் கலந்துரையாடியபோது, தனது கிரிக்கெட் ஆர்வத்தைப் பற்றி சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். தான் ஒரு ‘ஆஃப் ஸ்பின்னர்’ என்று குறிப்பிட்ட அவர், பள்ளிப் பருவத்தில் தனது தந்தை கலைஞருடன் கிரிக்கெட் விளையாடிய நினைவுகளையும், புக் கிரிக்கெட் விளையாடிய அனுபவங்களையும் மகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்தார்.
திராவிட நாயகரின் விக்கெட் கணக்கு இப்போ தொடங்கினது இல்ல, எப்பவோ தொடங்கினது!
பங்காளிகளும், சங்கிகளும், ஆவலுடன் எதிர்பார்த்த தலைவரின் அசத்தல் பவுலிங் வீடியோ இதோ உங்களுக்காக! 😍🔥
POWERHOUSE @mkstalin 🔥 pic.twitter.com/yg1LFBcNUN
— DMK IT WING (@DMKITwing) December 26, 2025
குறிப்பாக, சென்னையில் நடைபெற்ற நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் பந்துவீச்சாளராகக் களம் இறங்கிய முதலமைச்சர், நடிகர் சிம்பு உட்பட மூன்று முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தியதாகத் தெரிவித்தார். அவர் விக்கெட் எடுக்கும் அந்தப் பழைய காணொளிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி, விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் இளைஞர்களிடையே மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகின்றன.
