தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திருப்பத்தூரில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது, உற்சாகமடைந்த ஆதரவாளர் ஒருவர் அவர் மீது பூக்களைத் தூவிய தருணத்தில் எதிர்பாராத விதமாகத் தனது செல்போனையும் அண்ணாமலை நோக்கி வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்னிந்திய பார்வர்டு பிளாக் வேட்பாளர் திருமாறனை ஆதரித்து திறந்த வாகனத்தில் அண்ணாமலை வாக்கு சேகரித்தபோது, கூட்டத்தில் இருந்த ஒருவர் வீசிய பூக்கள் அண்ணாமலையின் முகத்தில் பட்டன; அதோடு வந்த செல்போன் அவரது முகத்தில் மோதியது. இதனால் ஒரு நிமிடம் அதிர்ச்சியடைந்த அண்ணாமலை, பின் நிதானமாக அந்த செல்போனை எடுத்து சிரித்தபடியே மீண்டும் அந்த ஆதரவாளரிடமே ஒப்படைத்தார்.

மற்ற அரசியல் தலைவர்கள் இது போன்ற தருணங்களில் ஆவேசப்படுவதைப் பார்த்துள்ள நிலையில், அண்ணாமலையின் இந்த நிதானமான மற்றும் கனிவான செயல் பாஜகவினரிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. “இதுதான் மாற்றத்திற்கான அரசியல்” என பாஜக ஆதரவாளர்கள் இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.