இன்ஸ்டாகிராமில் வெளியான ஒரு ஆச்சரியமான வீடியோ பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அதில், ஒரு நபர் மீன் தொட்டியின் விளிம்பில் மீனுக்கான உணவை வைக்கிறார். உடனே, தொட்டியில் உள்ள மீன் தண்ணீரை வேகமாகவும் வலுவாகவும் உணவின் மீது அடித்து, அதை தண்ணீருக்குள் விழச் செய்கிறது. பிறகு அந்த உணவை சாப்பிடுகிறது. இந்த ஸ்மார்ட் செயல் மீனின் அறிவுத்திறனை காட்டுவதாக உள்ளது.

இந்த வீடியோ இதுவரை 8 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் லைக் செய்து, பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர். பலர் கமெண்ட்களில் ஆச்சரியத்தையும் வியப்பையும் தெரிவித்துள்ளனர். இது சமூக வலைதளங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.