இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்கக் கோரி, முதலமைச்சர் விஜய் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு அதிரடி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
எல்லையைத் தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் அடிக்கடி சிறைபிடிக்கப்படுவதும், அவர்களின் பல கோடி மதிப்புள்ள படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர்கதையாகி வருவதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த விவகாரத்தில் மத்திய அரசு உடனடியாகத் தலையிட்டு, தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தைகளை நடத்தி மீனவர்களையும் அவர்களின் வாழ்வாதாரமான மீன்பிடிப் படகுகளையும் மீட்டெடுக்க வேண்டும் என்று விஜய் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்களின் குடும்பத்தினர் படும் துயரத்தை விவரித்துள்ள அவர், இந்த நீண்டகாலப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்றும் அந்தக் கடிதத்தில் உருக்கமாகக் கேட்டுக்கொண்டுள்ளார்.
