தமிழக அரசியலில் இதுவரை கண்டிராத ஒரு மாபெரும் ‘கிளைமாக்ஸ்’ இன்று அரங்கேறியுள்ளது.

முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில், சி.வி.சண்முகம் தலைமையிலான அதிமுக எம்.எல்.ஏ-க்கள் அதிரடியாக ஆதரவு தெரிவிக்க முன்வந்துள்ளனர்.

இந்த மெகா திருப்பத்தைத் தொடர்ந்து, எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் உள்ளிட்ட அதிமுக பட்டாளத்தைச் சந்திக்க முதலமைச்சர் விஜய் நேரில் விரைந்துள்ளார். அதிமுக அதிகாரப்பூர்வமாக இரண்டாகப் பிளவுபட்டுள்ள நிலையில், ஒரு காலத்தில் எதிர்க்கட்சியாக இருந்தவர்கள் இன்று முதலமைச்சரை வரவேற்கப் பூங்கொத்துகளுடன் வாசலில் காத்திருக்கும் காட்சி, கோட்டை வட்டாரத்தையே அதிர வைத்துள்ளது.

“>

 

“எடப்பாடிக்கு இது மிகப்பெரிய அடி” என ஒரு தரப்பும், “விஜய்யின் ராஜதந்திரம் ஜெயித்துவிட்டது” என மறுதரப்பும் பேசிக்கொள்ள, இந்தச் சந்திப்பு தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைத்துள்ளது.