தமிழக அரசியல் களத்தில் ‘அதிசயங்களும் அற்புதங்களும்’ அரங்கேறிக் கொண்டிருக்கும் நிலையில், இன்று  விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் இல்லம் பெரும் பரபரப்புக்கு உள்ளானது.

நேற்று முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வைகோ, சீமான் போன்ற பெரும் தலைவர்களைச் சந்தித்த முதலமைச்சர் ஜோசப் விஜய், இன்று ஒரு முக்கிய நகர்வாகத் திருமாவளவனை நேரில் சந்தித்துப் பேசினார். முதலமைச்சரை இன்முகத்துடன் வரவேற்ற திருமாவளவன், அவருக்குப் பூங்கொத்து வழங்கியதுடன், பாசத்துடன் கட்டியணைத்துத் தனது வாழ்த்துகளையும் ஆதரவையும் வெளிப்படுத்தினார்.

முதலமைச்சர் விஜய்யுடன் அவர் காட்டிய இந்த நெருக்கம், தமிழக அரசியலில் புதிய சமன்பாடுகள் உருவாகப்போவதை உறுதிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Thanthi TV (@thanthitv)

“>