சென்ற 2006-ம் வருடம் ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி ரிலீஸ் ஆன படம் “வேட்டையாடு விளையாடு”. கௌதம் வாசுதேவ் மேனன் டைரக்டில் கமல்ஹாசன், பிரகாஷ்ராஜ், ஜோதிகா, கமாலினி முகர்ஜி, டேனியல் பாலாஜி போன்றோர் நடிப்பில் உருவாகிய இப்படம், திரையரங்கில் வெளியான சமயத்தில் மாபெரும் வெற்றி பெற்றது.

இப்படத்திற்கு ஹாரிஜ் ஜெய ராஜ் இசையமைத்திருந்தார். இந்நிலையில் வேட்டையாடு விளையாடு திரைப்படம் சில தொழில்நுட்ப மாற்றங்கள் செய்யப்பட்டு வரும் 23ஆம் தேதி ரீ-ரிலீஸ் செய்யப்படுவதாக படக்குழுவினர் புது போஸ்டருடன் அறிவித்து உள்ளனர். முன்னதாக ரஜினியின் பாபா படம் இதுபோல் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.