
தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இது வருகிற 22ஆம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் அடுத்து இரு தினங்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஏற்கனவே டிசம்பரில் வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் என்றும் அதிக மழைப்பொழிவு இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்ட நிலையில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. வருகிற 24-ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் மழை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.