மடோன் அஸ்வின் டைரக்டில் சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர், மிஷ்கின், சரிதா உள்பட பலரது நடிப்பில் உருவாகி இருக்கும் படம் மாவீரன். இப்படத்தின் சூட்டிங் முடிந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது. மாவீரன் படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் ஜூன் இறுதியில் பக்ரீத் பண்டிகைக்கு வெளியிட திட்டமிட்டிருந்தது. எனினும் தான் நடித்துள்ள மாமன்னன் படத்தை ஜூன் மாதம் இறுதியில் வெளியிட திட்டமிட்ட உதயநிதி ஸ்டாலின், பிறகு மாவீரன் படத்தின் ரிலீஸ் தேதியை ஆகஸ்ட் 11-ம் தேதிக்கு மாற்றினார். இதுகுறித்த அறிவிப்பும் வெளியிடப்பட்டது.

இப்போது ரஜினி நடித்திருக்கும் ஜெயிலர் படத்தை ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியிட திட்டமிட்டு உள்ளனர். இதனால் மீண்டும் மாவீரன் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்படுகிறதாம். அதன்படி, மாவீரன் படத்தை ஆகஸ்ட் 11ஆம் தேதி வெளியிடுவதாக கூறிய நிலையில், தற்போது ஜூலை மாதத்திலேயே அப்படத்தை வெளியிட திட்டமிட்டு வருவதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. எனினும் ஜெயிலர் படத்தின் ரிலீஸ் அறிவிப்பிற்கு பிறகு மாவீரன் படத்தின் புது ரிலீஸ் தேதியை முடிவுசெய்ய இருப்பதாக சொல்லப்படுகிறது.