சாலையோரத்தில் மழையில் நனைந்த நிலையில் கிடந்த நாட்குறிப்பு ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆதித்யா என்ற இளைஞர் தனது நண்பர்களுடன் சென்றபோது கண்டெடுத்த அந்த நாட்குறிப்பைத் திறந்து பார்த்தபோது, அதில் கையெழுத்தில் எழுதப்பட்ட நினைவுகள், காதல் பாடல்கள், அழகான ஓவியங்கள் மற்றும் நினைவுப் பரிசாக ஒட்டப்பட்ட சாக்லேட்டுகள் போன்றவை இருந்தன.

மழையால் அந்த நாட்குறிப்பு சற்று சேதமடைந்திருந்தாலும், அதை உருவாக்கியவரின் உழைப்பும் அன்பும் அதில் தெளிவாகத் தெரிந்தது. ஒரு இளம்பெண் மிகவும் சிரத்தையுடன் தனது உணர்வுகளைப் பதிவு செய்து பாதுகாத்து வந்த அந்த நாட்குறிப்பு, அதன் உரிமையாளரிடம் சேர வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் ஆதித்யா அந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்த வீடியோவை இணையத்தில் பார்த்த பலரும், அந்த நாட்குறிப்பு எப்படிச் சாலையோரத்தில் வந்தது என்பது குறித்துப் பல்வேறு யூகங்களை முன்வைத்து வருகின்றனர். சிலர் அதைத் தவறுதலாகத் தொலைத்திருக்கலாம் என்று கூற, மற்றவர்களோ காதலில் ஏற்பட்ட பிரிவின் காரணமாக அது வீசப்பட்டிருக்கலாம் என்று வருத்தத்துடன் பதிவிட்டுள்ளனர்.

 

View this post on Instagram

 

A post shared by lucky (Aditya) (@hustleradiii7001)

“>

எது எப்படியிருந்தாலும், இந்த நாட்குறிப்பில் உள்ள அர்ப்பணிப்பையும் கலைத்திறனையும் பாராட்டிய பல நெட்டிசன்கள், இந்த வைரல் வீடியோ மூலம் அதன் உரிமையாளரைக் கண்டுபிடித்து மீண்டும் அவரிடமே ஒப்படைக்க வேண்டும் என்று ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.