பாமகவைச் சேர்ந்த முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஏ.கே.மூர்த்தியின் இல்ல திருமண வரவேற்பு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
மேலும், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், கே.பி.முனுசாமி (அ) தங்கமணி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் விழாவில் பங்கேற்று மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த திருமண வரவேற்பு விழாவின் போது, சென்னையில் ஏ.கே.மூர்த்தியின் இல்லத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் பாமக முன்னணி நிர்வாகி ஜி.கே.மணி ஆகியோர் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டு ஒருவருக்கொருவர் வணக்கம் தெரிவித்துக் கொண்டனர். இது அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.
பாமக கட்சி தற்போது நிறுவனர் ராமதாஸ் தரப்பு மற்றும் அன்புமணி ராமதாஸ் தரப்பு என இரண்டு கோஷ்டிகளாகப் பிரிந்துள்ள நிலையில், “என்னையும், ராமதாஸையும் பிரித்தவர் ஜி.கே.மணிதான்” என அன்புமணி ராமதாஸ் தொடர்ந்து குற்றம் சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
ஜி.கே. மணி வணக்கம் தெரிவிக்க பதிலுக்கு வணக்கம் தெரிவித்த அன்புமணி#chennai #pmk #AnbumaniRamadoss pic.twitter.com/v19NpIYHky
— Thanthi TV (@ThanthiTV) December 14, 2025
