அமெரிக்காவின் உட்டாவில் சமீபத்தில் ஒரு அதிர்ச்சிகர சம்பவம் நடந்தது. கேலப் ஊட்ஸ் என்பவர் சமீபத்தில் GrubHub செயலியில் இருந்து ஒரு மில்க் ஷேக் மற்றும் பிரஞ்சு பிரைஸ் நொறுக்குத் தீனியை ஆர்டர் செய்துள்ளார். தொடர்ந்து அவருக்கு டெலிவரி ஊழியர் வந்து பார்சலை வழங்கிவிட்டுச் சென்றுள்ளார். அதனை சாப்பிடத் தொடங்கியபோது அதிர்ச்சி காத்திருந்தது.

சிறுநீர் வாசனை வந்ததால் மிரண்டு போன கேலப், சிறுநீராக இருக்கலாம் என சந்தேகம் அடைந்து, டெலிவரி ஊழியரை மீண்டும் அழைத்துள்ளார். அப்போது பதிலளித்த டெலிவரி ஊழியர், சிறுநீரை ஊற்றி தவறுதலாக டெலிவரி செய்ததாக பதிலளித்துள்ளார். இது குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளது.