மிதுனம் ராசி அன்பர்களே,

இன்று ராசியில் சந்திராஷ்டமம் இருப்பதால் பண விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். முறையற்ற வழிகளில் சென்றால் தேவையற்ற செலவுகள் ஏற்படலாம். திட்டமிட்டு செயல்படுவது நல்லது. உறவுகளுக்கு இடையே மனக்கசப்புகள் உருவாகும். கோபத்தை குறைத்தால் மட்டுமே நல்லது நடக்கும். இழப்புகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். முக்கிய முடிவுகளை தெளிவாக எடுக்க வேண்டும்.

சகோதர சகோதரிகளுக்கு வேண்டியவற்றை செய்து கொடுப்பீர்கள். கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. யாரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். தொழில் போட்டிகளை சமாளிக்க வேண்டும். அடுத்தவர்களின் செயல்களுக்கு பொறுப்பேற்காமல் இருப்பது நல்லது. இன்று பெண்கள் முன்கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். பெண்களுக்கு சில திட்டங்கள் காலதாமதமாக நடக்கலாம்.

இன்று மாணவர்கள் மிகவும் பொறுப்பாக இருக்க வேண்டும். விளையாடும் போது கவனமாக விளையாட வேண்டும். எதையும் சிந்தித்து செயலாற்ற வேண்டும். இன்று சனிக்கிழமை என்பதால் எல் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுத்துவிட்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிஷ்ட எண்: மூன்று மற்றும் ஐந்து

அதிஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் நீல நிறம்