ரிஷபம் ராசி அன்பர்களே,

இன்று கவலைகளை மறந்து எந்த செயலிலும் ஈடுபடுவீர்கள். பொருளாதார நிலை சீராக உயரும். மாற்றுக்கருத்து உடையவர்கள் மனம் மாறுவார்கள். தைரியமாக எதிலும் ஈடுபடுவீர்கள். வாய்ப்புகளை அற்புதமாக பயன்படுத்திக் கொள்வீர்கள். நேரம் காலம் பார்த்து எதிலும் ஈடுபடுங்கள். புதுப்புது விஷயங்களை நாட்டம் செல்லும். நட்பால் நல்லது நடக்கும். மாற்றங்கள் ஏற்றங்கள் கண்டிப்பாக ஏற்படும்.

திறமையால் வெற்றி பெற முடியும். அடுத்தவர்களின் விஷயத்தில் தலையிட வேண்டாம். ஒருமுறைக்கு இருமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. மனப்பதட்டத்தை தவிர்த்து விடுங்கள். இன்று மனதிருப்தி ஏற்படும். நல்லதே நடக்கும். ராஜ யோகங்கள் அமைந்துவிடக்கூடும். இனிய பயணங்களால் மகிழ்ச்சி அதிகரிக்கும். பண தேவைகள் பூர்த்தியாகும். இன்று பெண்களுக்கு பணி சுமை கொஞ்சம் இருக்கும். எந்த வேலைகளையும் சிறப்பாக முடித்து பாராட்டுகளை பெறுவீர்கள்.

உணர்ச்சிவசப்பட வேண்டாம். முன் கோபத்தை தவிர்த்திடுங்கள். இன்று மாணவர்கள் கல்வியில் சாதிக்க முடியும். விளையாட்டு துறையிலும் சாதிக்க முடியும். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள். இன்று சனிக்கிழமை என்பதால் எல் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுத்துவிட்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிர்ஷ்ட எண்: மூன்று ஏழு மற்றும் ஒன்பது

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் நீல நிறம்