மேஷம் ராசி அன்பர்களே,

இன்று எதிரிகள் அடிபணிவார்கள். தொல்லைகள் எதுவும் இல்லாமல் நிம்மதியாக இருப்பீர்கள். எதிர்பார்த்த வரவுகள் சிறப்பாக கிடைக்கும். சொந்த வாகனம் வாங்க போட்ட திட்டம் வெற்றியைக் கொடுக்கும். புதிய நட்பு மலரும். தேவைகள் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். பணப்பற்றாக்குறை விலகிச் செல்லும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் கிடைக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் உயர் அதிகாரிகளிடம் பணிவாக நடந்து கொள்வது நல்லது. மனவிரக்தி ஏற்படலாம். தன்னம்பிக்கையை இழந்து விட வேண்டாம். இன்று பெண்கள் மாறுபட்ட கோணத்தில் சிந்தித்து வெற்றி பெறுவீர்கள். எதையும் தைரியமாக செய்து வெற்றிவாகை சூடுவீர்கள். பெண்களுக்கு இன்று யோகமான நல்ல பலன் ஏற்படும்.

இன்று மாணவர்கள் புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களை சிறு வயது முதலே தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள். முயற்சி செய்தால் முடியாதது எதுவும் இல்லை. இன்று சனிக்கிழமை என்பதால் எல் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுத்துவிட்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிர்ஷ்ட எண்: மூன்று ஆறு மற்றும் ஒன்பது

அதிர்ஷ்ட நிறம்: இளம் சிவப்பு மற்றும் நீல நிறம்