மிதுனம் ராசி அன்பர்களே,

இன்று அனைவரிடத்திலும் அன்பாக நடந்து கொள்வீர்கள். காரியங்கள் அற்புதமாக செய்து முடிக்க முடியும். செலவுகள் ஏற்படலாம் பார்த்துக் கொள்ளுங்கள். இரவு நேர பயணம் மகிழ்ச்சியை கொடுக்கும். சொகுசான வாழ்க்கைக்கு இன்று அடிக்கலாம் அமைத்துக் கொள்வீர்கள். புதிய வாகனம் வாங்கும் யோகம் உள்ளது. இன்று தொழில் வியாபாரம் முன்னேற்றம் அடையும். போட்டிகள் குறையும்.

எதிர்பார்த்த லாபம் கண்டிப்பாக கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நிர்வாக திறமையை வெளிப்படுத்துவீர்கள். மேல் அதிகாரிகள் சொல்லும் விஷயங்களை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். அனைவரின் ஆதரவும் உண்டு. இன்று பெண்கள் எதையும் யோசித்து செய்ய வேண்டும். அடுத்தவர்களிடம் உரையாடும் போது கவனமாக இருங்கள். இந்த நாளை அற்புதமாக பயன்படுத்திக் கொள்வீர்கள்.

இன்று மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். வெற்றிக்காக கடுமையாக உழைப்பீர்கள். புதுப்புது விஷயங்கள் மனதில் தோன்றும். ஆராய்ச்சி தொடர்புடைய விஷயங்களில் நாட்டம் செல்லும். இன்று முருகப்பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிஷ்ட எண்: ஆறு மற்றும் ஒன்பது

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் சிவப்பு நிறம்