கடகம் ராசி அன்பர்களே,

இன்று கடன் பிரச்சினைகளுக்கு கண்டிப்பாக முற்றுப்புள்ளி வைப்பீர்கள். கடனை எப்படியாவது அடைத்து விட வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும். மேலதிகாரிகளின் ஒத்துழைப்பால் அரசு அதிகாரிகளுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் சீராகும். எதிர்பாராத முன்னேற்றங்களால் வாழ்க்கையில் புதிய திருப்பங்கள் ஏற்படும்.

எதிர்பார்த்த பணவரவு தாமதமாகலாம். மன நிம்மதி அதிகரிக்கும். எந்த செயலையும் சிந்தித்து செய்வது நல்லது. முறையற்ற வழிகளில் சென்றால் பணக்கஷ்டம் வரும் சூழல் உள்ளது. செலவுகளை மட்டும் கட்டுப்படுத்துங்கள். இன்று பெண்களுக்கு கோரிக்கைகள் நிறைவேறும். காரியங்கள் அற்புதமாக நடக்கும். இந்த நாளை இனிமையாக கொண்டாடுவீர்கள்.

இன்று மாணவர்கள் தன்னம்பிக்கை இழக்க வேண்டாம். தைரியமாக செயல்படுங்கள். கல்வியில் வெற்றி பெற முடியும். உடற்கல்வி சிறப்பாக அமையும். முயற்சி கண்டிப்பாக அவசியம். பெரியோர்களுக்கு மதிப்பு கொடுங்கள். பெற்றோரிடம் வாக்குவாதத்தை தவிர்த்திடுங்கள். இன்று முருகப்பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிஷ்ட எண்: 3, 6 மற்றும் 9

அதிஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்