சிம்மம் ராசி அன்பர்களே,

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி கலைக்கட்டும். வீட்டில் எந்த ஒரு பிரச்சனையும் இருக்காது. எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி இருக்கும். தொழில் வியாபாரம் குறித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். அனைவரிடத்திலும் நல்ல பெயர் கிடைக்கும். புதிய சேமிப்புகளை முதலீடு செய்வீர்கள். தொழில் வியாபாரத்தால் வீண் அலைச்சல் மற்றும் பண செலவு ஏற்படலாம்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக பணிகளை கூடுதல் கவனத்துடன் செய்வது நல்லது. குடும்பத்தில் நிம்மதி குறையும் படியான சூழ்நிலை ஏற்பட்டு பின்னர் சரியாகும். சிந்திக்காமல் எதிலும் ஈடுபட வேண்டாம். பெண்கள் இன்று எல்லா வேலைகளையும் கனகச்சிதமாக முடித்து அனைவரிடமும் நல்ல பெயர் பெறுவீர்கள். யோகமான பலன் உள்ளது. திருமண முயற்சிகளை மேற்கொண்டால் வரன்கள் கைகூடும்.

இன்று மாணவர்கள் மிகவும் பொறுப்புடன் செயல்பட வேண்டும். கல்வி மீது முழு அக்கறை கொள்ள வேண்டும். படித்து முன்னேற வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும். முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிஷ்ட எண்: ஒன்று ஐந்து மற்றும் ஆறு

அதிஷ்டம் நிறம்: பச்சை மற்றும் ஆரஞ்சு நிறம்