மிதுனம் ராசி அன்பர்களே….

இன்று மனதிற்குள் கண்டிப்பாக மகிழ்ச்சி ஏற்படும். முக்கியமாக நண்பர்கள் நல்ல செய்தியை கொண்டு வந்து கொடுப்பார்கள்.. வாழ்க்கையில் எதிர்கொண்ட சிரமங்கள் பற்றி சிந்தனை குறையும் .தொழில் வியாபாரம் செழித்து வளரும். உபரி வருமானம் கிடைக்கக்கூடும். குடும்பத்தின் தேவைகள் கண்டிப்பாக நிறைவேறும். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகள் கூறுவது படி நடந்து கொள்வது நன்மையை கொடுக்கும்.

இன்று நிலுவையில் உள்ள பணம் கண்டிப்பாக வரும். குடும்பத்தில் இருப்பவர்களால் சிறுசிறு பிரச்சனைகள் ஏற்பட்டு சரியாக கூடும். குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வாழ்க்கை துணையின் ஆரோக்கியத்திலும் கவனம் எடுத்துக் கொள்ளுங்கள். நல்ல நண்பர்களின் சேர்க்கை ஏற்படும். பெரிய அளவில் பிரச்சனை இல்லை .ஆனால் காலையில் எழுந்திருக்கும் போது சுறுசுறுப்புடன் எழுந்திருப்பது நல்லது.

அனைவரிடமும் சிரித்து பேசி பழக முடியும். அனைவருக்கும் தேவையானதை நீங்கள் செய்து கொடுக்க முடியும். முன்னேற்றமான வாழ்க்கையை என்ற அமைத்துக் கொள்ள முடியும். பொது விஷயங்களில் கையாளும் போது கவனமாக இருக்கவும். தேவையில்லாத பகை ஏற்படும் வாய்ப்பு உள்ளது. வழக்கு விவகாரங்களில் தெள்ளத்தெளிவாக புரிந்து கொண்டு செயல்படுங்கள். முக்கியமாக பொது வழக்குகளில் தயவுசெய்து உங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டாம்.

இன்று தந்தையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். புத்தி கூர்மையோடு செயல்பட்டால் கண்டிப்பாக வெற்றி கிடைக்கும் . இன்று  பெண்களுக்கு வேலை சுமை அதிகமாக இருக்கும். நேரத்திற்கு உணவு எடுத்துக் கொள்ள வேண்டும் .எதையும் தைரியமாக எதிர்கொள்ள வேண்டும். பெண்களுக்கு இஷ்ட தெய்வத்தின் அருள் துணையாக இருக்கும் .நம்பிக்கையோடு எதிலும் ஈடுபடுங்கள் அது வெற்றியை கொடுக்கும்.

இன்று மாணவர்கள் நேரங்களை செலவு செய்ய வேண்டாம். புதிய விஷயங்களை கற்றுக் கொள்ளுங்கள். நல்ல விஷயங்களை கற்றுக் கொள்ளுங்கள். மொழி சம்பந்தப்பட்ட பாடங்களை கற்று தெரிந்து கொள்ள பாருங்கள். மாணவர்களுக்கு புத்துணர்ச்சி கண்டிப்பாக கிடைக்கும். காரியங்களில் வெற்றி ஏற்படக்கூடும். மாணவர்கள் நினைத்தால் கண்டிப்பாக வெற்றிக்கான வாழ்க்கை அமைத்துக் கொள்ள முடியும் .

இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது பச்சை நிறத்தில் ஆடை அணியுங்கள். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும் .அதே போன்று இன்றைய தினம் நந்தீஸ்வரர் மற்றும் முருகப்பெருமானை வழிபட்டு எந்த ஒரு பணியிலும் ஈடுபடுங்கள். நல்ல முன்னேற்றம் காணலாம்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண்  :  ஐந்து மற்றும் ஒன்பது

அதிர்ஷ்ட நிறம்  : பச்சை மற்றும் வெள்ளை நிறம்