சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்கள் கடந்த மூன்று மற்றும் நான்காம் தேதிகளில் வங்க கடலில் ஏற்பட்ட மிக்ஜாம் புயில் காரணமாக பேரிடரை சந்தித்தது. இந்த மழை வெள்ளத்தில்  லட்சக்கணக்கான மக்கள் தங்களுடைய உடைமைகளை இழந்தார்கள். மேலும் முக்கிய ஆவணங்களான ஆதார், ரேஷன் கார்டு, பிறப்பு சான்றிதழ் முதல் அனைத்து ஆவணங்களையும் இழந்தார்கள்.

இந்த நிலையில் வெள்ளத்தில் தங்களுடைய ஆவணங்களை இழந்த அவர்களுக்கு மீண்டும் இலவசமாக வழங்கும் விதமாக சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்று முதல்வர் அறிவித்திருந்தார். அந்த வகையில் சென்னையில் நேற்று முதல் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தங்களுடைய சான்றிதழ்கள் இழந்தவர்களுக்கு சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இதனை சான்றிதழை இழந்தவர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.