சிவா, சூர்யா கூட்டணியில் உருவாகி வரும் ‘கங்குவா’ படத்தின் டீசர் இன்று மாலை 4.30 மணிக்கு வெளியாக உள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 10 மொழிகளில் வெளியாக உள்ளது. 3D தொழில்நுட்பத்தில், பீரியட் படமாக உருவாகும் இப்படத்தில் 2 கதாபாத்திரங்களில் சூர்யா நடிப்பதாக தெரிகிறது. இந்நிலையில், மாலை டீசர் வெளியாவதை குறிப்பிட்டு படத்தின் புதிய போஸ்டரை சூர்யா, தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்