சிவகார்த்திகேயன் இப்போது மண்டேலா திரைப்படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் “மாவீரன்” படத்தில் நடித்துள்ளார். இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகியுள்ளது. இதில் அதிதி ஷங்கர், சரிதா, டைரக்டர் மிஷ்கின் மற்றும் யோகி பாபு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர்.

மாவீரன் படம் வருகிற ஜூலை 14-ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகவுள்ளது. இந்நிலையில் மாவீரன் படத்தின் 2-வது பாடலான “வண்ணாரப்பேட்டையில” பாடல் தற்போது வெளியாகியுள்ளது. சிவகார்த்திகேயன் மற்றும் அதிதி ஷங்கர் இணைந்து பாடி இருக்கும் இந்த பாடலை ரசிகர்கள் சமூகவலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.