தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஆட்சி அமைப்பதற்கான பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், இன்று ஆளுநரைச் சந்தித்து தனது ஆதரவு கடிதங்களைச் சமர்ப்பித்தார்.
இந்தச் சந்திப்பின் போது விஜய்யின் ‘டிரெஸ் கோட்’ அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இதற்கு முன்பு ஆளுநரைச் சந்தித்த போது ஒருவிதமான உடையில் வந்த விஜய், இன்று ஆளுநரிடம் 120 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு கடிதத்தை வழங்க வந்தபோது, கச்சிதமான வெள்ளை சட்டை மற்றும் நீல நிற பேண்ட் அணிந்து மிகவும் நிதானமாகவும், ஒரு பக்குவப்பட்ட அரசியல்வாதி போலவும் காட்சியளித்தார்.
அதிகாரத்தைக் கைப்பற்றத் தயாராகிவிட்டதைக் குறிக்கும் வகையில் விஜய்யின் இந்த உடை மாற்றம் இருந்ததாக அவரது தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
ஆளுநர் மாளிகையில் இன்று நடந்த இந்தச் சந்திப்பு, தமிழக அரசியலில் மிக முக்கியமான ஒரு திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.
