பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரங்களில், எதிர்க்கட்சிகளின் ‘மகாகத்பந்தன்’ கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளரும், ராஷ்டிரிய ஜனதா தளத்தின் (RJD) தலைவருமான தேஜஸ்வி யாதவ், தனது தொகுதியான ராகோபூரிலேயே ஆரம்ப கட்டத்தில் பின்னடைவைச் சந்தித்துள்ளது, அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவர் சுமார் 14,583 வாக்குகள் வித்தியாசத்தில் பின் நிலையில், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளர் சதீஷ்குமார் யாதவ் 17,599 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்தார். இளம் தலைவர் தேஜஸ்வி யாதவின் தனிப்பட்ட நிலவரம், அவரது கூட்டணிக்கு ஒட்டுமொத்தமாக ஏற்பட்டுள்ள சறுக்கலின் தீவிரத்தைக் காட்டுவதாக உள்ளது.
​இதற்கிடையே, ஒட்டுமொத்தப் பிகார் தேர்தல் முடிவுகளும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குச் (NDA) சாதகமாகவே அமைந்துகொண்டிருக்கின்றன. என்.டி.ஏ. கூட்டணி 190 இடங்களிலும், தேஜஸ்வி யாதவ் தலைமையிலான மகாகத்பந்தன் கூட்டணி 50 இடங்களிலும் மட்டுமே முன்னிலை வகித்தன.

இந்தத் தேர்தல் முடிவுகள், பிகார் அரசியல் வரலாற்றை மாற்றி எழுதும் வகையில் அமைந்து வருவதாகவும், இது ஆளும் கூட்டணிக்குக் கிடைத்த அமோக வெற்றியாகப் பார்க்கப்படுவதாகவும் அரசியல் விமர்சகர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்