கோவை விமான நிலையத்தில் சசிகலா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், கொங்கு நாட்டு மக்கள் பிரியமாக என்னை வரவேற்றது மனதிற்கு மகிழ்ச்சியாக உள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவில் பிரிந்த அனைவரையும் இணைக்க நிச்சயமாக வாய்ப்பு உள்ளது. அனைவரையும் ஒருங்கிணைக்கும் முயற்சி நடந்து வருகிறது. தமிழ்நாட்டின் நிதிநிலை திமுகவினருக்கு நன்றாகவே தெரியும். கொடுக்க முடியாத ஒன்றை கொடுக்கின்றேன் என்று சொல்வது மக்களை ஏமாற்றும் ஒன்றாக தான் பார்க்கிறேன். பாஜகவுக்கு அதிமுக அடிமையாக இருக்கிறது என்ற திமுக குற்றம் சாட்டுவதெல்லாம் அரசியலுக்காக வெளியில் சொல்லக்கூடிய ஒரு விஷயம் தான்.

அதிமுகவில் அம்மா இருந்தபோது இருந்த நிலை இப்பொழுது உள்ளதா என்பதை உங்கள் முடிவுக்கு விட்டு விடுகிறேன்.  ஆட்சிக்கு வந்து 3 வருடம் ஆகிவிட்டது, இதுவரைக்கும் எதுவும் செய்யவில்லை. சட்டம் ஒழுங்கு தமிழ்நாட்டில் இருக்கா? பார்கள் காலையில் திறந்தால் 24 மணிநேரமும் ஓடிக்கொண்டிருக்கிறது. மாமியார் ஒடச்சா மண்குடம்… மருமகள் ஒடச்சா பொன்குடமா? என்று சசிகலா கேள்வி எழுப்பியுள்ளார். “அரசு மக்கள் பிரச்சனையை பார்க்க வேண்டும் என்று செய்தியாளர் சந்திப்பில் குற்றம்சாட்டினார்.