மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான திரைப்படம் மாமன்னன். இந்த படத்தை திருமாவளவன் நேற்று திரையரங்கிற்கு சென்று பார்த்தார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், மாமனார் படத்தை மிக துணிச்சலாக வெளியிட்டு இருக்கிறார்கள். சனாதனத்தின் அடிப்படை கூறாக இருக்கும் சாதி பாகுபாட்டை இந்த படத்தில் அடிப்படை கூறாக எடுத்து இருக்கிறார்கள்.

ஒருபுறம் சாதி வெறியை எதிர்த்து மறுபுறம் சமூக நீதி அரசியலை ஆதரித்தும் நகர்கிறது. இந்த படத்தில் வரும் நட்சத்திர சின்னம், வாக்கு எண்ணிக்கையில் ஏற்படும் பின்னடைவு, தொகுதிகளின் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு மாமன்னர் வெற்றி பெற்றார் என்று அறிவிக்கப்படுவது எல்லாம் 2019 என்னுடைய தொகுதியான சிதம்பரம் பதற்றத்தை நினைவுபடுத்தியது என்று கூறியுள்ளார்.