நாடு முழுவதும் அரசுத் துறையில் பணியாற்றும் ஊழியர்கள் தங்களின் ஓய்வு காலத்திற்கு பிறகு ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் ஓய்வூதியம் பெறுகிறார்கள். இதனால் லட்சக்கணக்கான ஓய்வூதியதாரர்கள் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக அரசு ஓய்வூதியர்கள் நேர்காணல் தொடர்பான புதிய நடைமுறை, நேற்று முதல் அமலுக்கு வந்தது.
அதன்படி, www.karuvoolam.tn.gov.in 6T60TM இணையதளத்தின் முகப்பு திரையில் ஓய்வூதியர்கள் நேர்காணல் என்ற இணைப்பை கிளிக் செய்து தங்கள் ஓய்வூதிய ஆணை எண். ஆதார் எண் ஆகியவற்றை உள்ளீடு செய்ய வேண்டும். பின் தங்கள் பெயர், ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம், நேர்காணல் மாதம் போன்ற விவரங்களை தெரிந்துக் கொள்ளலாம்
