பாஜக பாமக இடையிலான கூட்டணி இன்று உறுதியானது. தொகுதி உடன்படிக்கையில் கையெழுத்திட தைலாபுரம் தோட்டத்திற்கு வந்த அண்ணாமலை மற்றும் எல் முருகனை ராமதாஸ் மனைவி வரவேற்றார். அதன்பின்னர் ராமதாஸ் நல்ல நேரம் பார்த்து கையெழுத்திட்டார்  இதில், பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், மாநிலங்களவை சீட் குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை.

விசாரித்தபோது, அதிமுகவுடன் 7+1 பங்கீட்டை நிறைவு செய்த பாமகவை தங்கள் பக்கம் இழுக்க 10+1 தொகுதிகளுடன், ஆட்சி அமைந்ததும் மத்திய அமைச்சர் பதவி பற்றி முடிவு செய்யலாம் என பாஜக மேலிடம் உத்தரவாதம் அளித்ததாக கூறப்படுகிறது.