தமிழகத்தில் பள்ளி கல்லூரி மாணவர்களின் நலனுக்காக அரசு ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருவது மட்டுமல்லாமல் பள்ளி மாணவர்கள் உயர்கல்வி தொடர ஏதுவாக அரசு சார்பில் ஆயிரம் ரூபாய் உதவி தொகையும் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் ஏராளமான மாணவர்கள் பயனடைந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் 2022-23 ஆம் கல்வியாண்டில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு விரைவில் 5000 ரூபாய் வழங்கப்பட உள்ளது. மொத்தம் 5.16 லட்சம் பேர் தேர்வாண நிலையில் முதல் கட்டமாக 4.64 லட்சம் பேருக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. இதற்கான விவரங்களை எமிஸ் தளத்தில் பதிவு செய்யும் பணி ஏற்கனவே முடிவடைந்ததால் மாணவர்களின் வங்கி கணக்கில் விரைவில் ஐந்தாயிரம் ரூபாய் வரவு வைக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.