தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் ஜெயராம். இவருடைய மகன் காளிதாஸ். இவர் மலையாளத்தில் அதிக படங்களில் நடித்துள்ள நிலையில் தமிழில் மீன் குழம்பு மண்பானையும், விக்ரம் மற்றும் நட்சத்திரங்கள் நகர்கிறது போன்ற படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகர் காளிதாஸ் நேற்று காதலர் தினத்தை முன்னிட்டு தன்னுடைய காதலியை அறிமுகப்படுத்தியுள்ளார்.

அவர் மாடல் அழகியான தாரணி காளிங்காயருடன் ஜோடியாக இருக்கும் புகைப்படத்தை தன்னுடைய வலைதள பக்கத்தில் காதலை உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் இந்த புகைப்படம் தற்போது  சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் நிலையில் ஜெயராமுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.