உலக அளவில் வழங்கப்படும் விருதுகளில் அதிக மதிப்புடையதாக கருதப்படுவது அமெரிக்காவில் வழங்கப்படும் ஆஸ்கர் விருது. இந்த வருடத்திற்கான ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் இந்திய திரைப்படமான ஆர் ஆர் ஆர் திரைப்படத்தில் இடம் பெற்ற நாட்டு பாடல் சிறந்த பாடலுக்கான விருதுக்கு தேர்வாகி இருக்கின்றது. இந்த விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு முன்பாக இதில் நமீனீஸ்  ஆகியவர்கள் அனைவரும் பங்கேற்கும் ஆஸ்கர் நாமினீஸ்  லான்ஞ்சன் நிகழ்ச்சி நேற்று முன்தினம் கலிபோர்னியா மாகாணத்தில் நடைபெற்றது.

இதில் நாட்டு நாட்டு பாடலுக்கு இசையமைத்த கீரவாணி, பாடலை எழுதிய சந்திரபோஸ் உள்ளிட்டோர் பங்கேற்றார்கள். அப்போது ஸ்டீபன் ஸ்பீல் பெர்க் என பல ஹாலிவுட் பிரபலங்களை சந்தித்து பேசினார்கள். அடுத்த மாதம் 12-ம் தேதி 95-வது ஆஸ்கர் விருது விழா நடைபெற இருக்கின்றது. இதில் நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் விருது பெறுமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கின்றார்கள்.