தமிழ் சின்னத்திரையில் பிரபலமான நடிகராக இருப்பவர் நவீன். இவர் சன் டிவி, ஜெயா டிவி போன்ற டிவிகளில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றிய கண்மணி என்பவரை காதலித்து கடந்த வருடம் ஜூன் மாதம் திருமணம் செய்து செய்து கொண்டார். நடிகர் நவீன் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான இதயத்தை திருடாதே என்ற சீரியலின் மூலம் மிகவும் பிரபலமான நிலையில் தற்போது கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகும் கண்ட நாள் முதல் என்ற சீரியலில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் செய்தி வாசிப்பாளர் கண்மணி தற்போது 6 மாத கர்ப்பமாக இருக்கிறாராம். இந்த தகவலை கண்மணி வீடியோ வெளியிட்டு உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் இந்த வீடியோ தற்போது வைரலாகி வரும் நிலையில் நவீன் மற்றும் கண்மணி ஜோடிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by கண்மணி (@imkanmani)