இந்த நாட்களில் பாகிஸ்தான் கடும் வெள்ளக்கொடுமையில் சிக்கி தவிக்கிறது. இந்திய எல்லையை ஒட்டியுள்ள பஞ்சாப் மற்றும் சிந்து மாகாணங்களில் உள்ள ரவீ, சினாப், சத்லெஜ் ஆகிய நதிகள் வரலாற்றில் காணாத அளவிற்கு கரை நிரம்பி ஓடுகின்றன. இதில் ஏராளமான கிராமங்கள் மூழ்கி, வீடுகளும் விளைநிலங்களும் சேதமடைந்துள்ளன.

பாகிஸ்தான் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்ததின்படி, இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். இது போன்ற விபரீத நிலைமையில், பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் குவாஜா ஆசிப் செய்த அபூர்வமான அறிக்கைகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியுள்ளன.

ஒரு தொலைக்காட்சி பேட்டியில், குவாஜா ஆசிப் கூறியதாவது: “வெள்ளம் ஒரு ஆசீர்வாதம் என பார்க்க வேண்டும். மக்கள் வீட்டில் உள்ள வாளிகள், தொட்டிகள், டப்பாக்கள் மற்றும் மற்ற பொருட்களில் இந்த வெள்ளநீரை சேமித்து வைக்க வேண்டும் ” என பரிந்துரை செய்துள்ளார்.

இது மட்டுமல்லாமல், வெள்ளத்திலிருந்து பாதுகாப்பு கிடைக்க வேண்டுமெனில், ஏழு–எட்டு ஆண்டுகள் செலவாகும் பெரிய அணைகள் கட்டப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அவரது இந்த பேச்சு, பாதிக்கப்பட்ட மக்களின் வேதனையை கேவலப்படுத்துவது போல இருக்கிறது என பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

“>

 

இந்நிலையில், பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலம் முழுவதும் நீரில் மூழ்கியுள்ள ஒரு சூழ்நிலையில், இத்தகைய மோசமான , உணர்வுப்பூர்வமற்ற கருத்து கூறியதை அங்குள்ள மக்கள் மற்றும் சமூக வலைதள பயனர்கள் கடுமையாக எதிர்த்துள்ளனர். “வெள்ள நிவாரண வேலைகளில் கவனம் செலுத்தாமல், மக்கள் கண் முன்னே நடந்த கொடுமையை ஆசீர்வாதம் என்று சொல்வது வெறும் வேடிக்கைதான்” என ஒருவர் தெரிவித்தார்.

தற்போது #KhawajaAsif ,#FloodBlunder ,#PakistanFloods2025 போன்ற ஹேஷ்டேக்குகள் மூலம், இந்த அமைச்சரின் கருத்துகள் பற்றி கடுமையான விமர்சனங்கள் கிளம்பி வருகின்றன.