துருக்கி நாட்டை சேர்ந்த நிசாமெட்டின் குர்சு என்பவரும் எஸிம் டெமிர் எனும் பெண்ணும்  திருமணம் செய்ய முடிவு செய்தனர். இதற்கு முன்பு நிச்சயதார்த்தம் செய்து கொள்ள நினைத்த இந்த தம்பதி துருக்கியின் வடமேற்கு பகுதியில் உள்ள கனக்கலே மலை உச்சத்திற்கு சென்றுள்ளனர். அங்கிருந்து சூரிய அஸ்தமனத்தை ரசித்துக்கொண்டே நிச்சயம் செய்து கொள்ள ஆசைப்பட்டனர். அவர்களின் விருப்பப்படி மலை உச்சியில் இருந்து சாஸ்திர சம்பிரதாயங்கள் முடிந்து ஒருவருக்கொருவர் மோதிரம் மாற்றி நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர்.

அதன் பிறகு இருவரும் மது அருந்தி சந்தோசமாக வந்தவர்களுடன் பேசிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் திடீரென எஸிம் அலறிய சத்தம் கேட்டுள்ளது. அதிர்ச்சி அடைந்து திரும்பி பார்த்த நிசாமெட்டின் தனது வருங்கால மனைவி மலை உச்சியில் இருந்து கீழே விழுவதை பார்த்து அதிர்ந்துள்ளார். அதன் பிறகு அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தும் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். நிச்சயதார்த்தத்திற்கு மோதிரம் மாற்றிய சில நிமிடங்களிலேயே பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.