ரஷ்யா – உக்ரைன் இடையே ஒன்றரை வருடங்களை தாண்டியும் போர் நீடித்து வருகிறது. சமீபத்தில் கிரீமியா பகுதியில் உள்ள பாலம் மற்றும் ஆயுதக் கிடங்கு மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல் மேற்கொண்டது. மேலும் ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோவிலும் இதேபோன்று ட்ரோன் தாக்குதலை நடத்தியது.

இந்நிலையில் உக்ரைனின்  தலைநகரான கிவ்வில் ரஷ்ய படைகள் வான்வழி தாக்குதலை மேற்கொண்டனர். இதனால் வீட்டை விட்டு வெளியேறிய பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகுந்தனர். ரஷ்யாவின் இந்த தாக்குதலை முறியடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. கிரீமியா மற்றும் மாஸ்கோவில் நடந்த ட்ரோன் தாக்குதலுக்கு ரஷ்யாவின் பதிலடிதான் இந்த வான்வழி தாக்குதல் என்று கூறப்படுகிறது.