அமெரிக்காவில் உள்ள வெர்ஜீனியா பகுதியை சேர்ந்தவர்கள் ரியான் கீத் ஹார்ட் மேன் எல்லியோ எம் ஹாட்மேன் தம்பதி. இவர்கள் தங்களது 8 வயது மகளை உணவு கொடுக்காமல் கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். வெகு நாட்களாக சிறுமிக்கு உணவு வழங்காமல் இருந்துள்ளனர். தனது வீட்டின் மாடியில் இருந்து கீழே இறங்கவே சிறுமிக்கு தடை விதித்துள்ளனர். இதனால் ஒரு கட்டத்தில் பசி தாங்க முடியாத சிறுமி தனது வீட்டின் இரண்டாவது மாடியில் இருந்து ஜன்னல் வழியாக தனது டெடி பியர் பொம்மையுடன் கீழே குதித்து தப்பிக்க முயற்சித்துள்ளார்.

கீழே விழுந்ததில் சிறு காயங்களே ஏற்பட்டிருந்ததால் அங்கிருந்து நடந்து சென்று தனது கண்ணில் பட்ட கடைக்கு சென்று எனது பெற்றோருக்கு நான் தேவை இல்லை. எனக்கு பசிக்கிறது. சாப்பிட ஏதாவது கொடுப்பீர்களா? என கேட்டுள்ளார். அந்த கடையின் பணியாளர் கூறுகையில், “எனக்கும் குழந்தைகள் உள்ளது. எந்த குழந்தைக்கும் தான் யாருக்கும் தேவைப்படவில்லை என்ற எண்ணம் வந்து விடக்கூடாது. சிறுமி பசிக்கிறது என்று உணவு கேட்ட போது என் இதயம் உடைந்து விட்டது” என தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார்.

இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டு குழந்தைகள் பாதுகாப்பு சேவை அமைப்பு விரைந்து வந்து சிறுமியையும் மேலும் மூன்று குழந்தைகளையும் அவர்களது பொறுப்பில் அழைத்து சென்றது. அதுமட்டுமில்லாமல் வீட்டை சோதனை செய்த அதிகாரிகள் ஒரு குடும்பத்திற்கு தேவையான உணவுகள் அங்கு இருந்ததை கண்டுள்ளனர். இதையடுத்து ஒரு வாரத்திற்கு மேலாக சிறுமியை  துன்புறுத்திய தாய் தந்தை கைது கைது செய்துள்ளனர்.