தமிழகத்தில்  மலைப்பகுதிகளில் வாழும் மகளிர் பயன்பெறும் வகையில் இலவச பேருந்து பயணத்திட்டம் விரிவுப்படுத்தப்படும் என்ற நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். மேலும் விடியல் பயண திட்டத்தின் மூலம் பேருந்துகளில் மகளிர் 444 கோடி பயணங்களை மேற்கொண்டுள்ளனர். சாதாரண கட்டண நகர பேருந்துகளில் பயணம் செய்யும் பெண்களின் சதவீதம் 65 சதவீதமாக உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.